UDF கட்டணம் உயர்த்தப்படும்
அதானி குழுமம் கட்டுப்பாட்டில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பயனர் மேம்பாட்டுக் கட்டணம்(UDF) 50% உயர்வு!
வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் மார்ச் 31, 2025 வரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் உள்நாட்டுப் பயணிகளுக்கு UDF கட்டணம் ரூ.506-ல் இருந்து ரூ.770-ஆக உயர்த்தி விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது
பயணிகளின் டிக்கெட் கட்டணங்களோடு சேர்த்து UDF கட்டணமும் வசூலிக்கப்படும் என்பதால், இந்த புதிய அறிவிப்பால் விமான கட்டணங்கள் மேலும் உயரும் என கூறப்படுகிறது
அடுத்தடுத்த நிதியாண்டுகளில் கூடுதலாக 70 ரூபாய் வரை UDF கட்டணம் உயர்த்தப்படும் எனவும் தகவல்