இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்க வேண்டும்
இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை உடனே தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புடன் பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒருங்கிணைத்து மேற்கொள்ளவேண்டும் எனவும் முதல்வர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.