சட்டசபையில் இன்றைய அறிவிப்புகள்
ரூ. 4 கோடி மதிப்பீட்டில் மலையேற்ற வழித்தடங்கள் மேம்பாடு.
தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் உள்ள 40 மலையேற்ற வழித்தடங்களுக்கான வரைபட புத்தகங்கள் உருவாக்கப்படுவதுடன்,
அத்தடங்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
ரூ. 3 கோடி மதிப்பீட்டில் ஆர்கிடேரியங்கள் மேம்பாடு
கூடலூர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆர்கிடேரியங்கள் (Orchidariums) மேம்படுத்தப்படும்.
பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் தேவைக்காகவும் உள்ளூர் சமூகத்தை ஆர்க்கிட் பாதுகாப்பை நோக்கி ஈர்ப்பதற்காகவும் பயன்படுத்தப்படும்.
பசுமைப் பள்ளிக்கூடத் திட்டம்!
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வும் தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் குறிக்கோள்களை நடைமுறைப்படுத்துவதற்கும் (Green School Programme)
மேலும் 100 பள்ளிகளுக்கு இந்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்
ரூ.3 கோடி செலவில் தமிழ்நாடு புதுமைத் தொழில் முனைவோர் திட்டம்
காலநிலை மாற்றத்துக்கு புதுமையான தீர்வுகள் அளிக்கும் 5 சிறந்த குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொழில் நிறுவனங்கள் துவக்குவதற்கு ஆதார நிதி வழங்கப்படும்.
ஸ்டார்ட் அப் தமிழ்நாடு இயக்கத்தோடு ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்