மழையால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் கட்டித் தந்த தமிழ்நாடு அரசு
மழையால் வீடுகளை இழந்த மக்களுக்கு 2 ஆண்டுகளில் வீடுகள் கட்டித் தந்த தமிழ்நாடு அரசு.
ஆட்சியரிடமிருந்து பட்டாக்களை பெற்ற மக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மழையால் வீடுகளை இழந்த 36 பேருக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் தலா ₹1.80 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், பட்டாக்களை குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் வழங்கியதால் பயனாளர்கள் மகிழ்ச்சி.
குடியிருக்க வீடு இன்றி தவித்த எங்களுக்கு இலவச பட்டாவுடன் வீடு கட்டித் தந்த முதலமைச்சருக்கு நன்றி என்றனர்.