மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 108 ஆண் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்களும் 59 பெண் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்களும் கலந்துகொண்டனர். இதில் 15 ஆண் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் மற்றும் 7 பெண் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், 22 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்