கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்டர்போல் உதவியுடன் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்டர்போல் உதவியுடன் விசாரணை நடக்கிறது என்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோடநாட்டில் சம்பவம் நடந்தபோது வெளிநாட்டு எண்ணில் இருந்து கனகராஜ-க்கு 5 முறை அழைப்பு வந்துள்ளது என்றும் வெளிநாட்டு எண் தொடர்புள்ளதால் இன்டர்போல் காவல்துறையின் விசாரணை நடக்கிறது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை ஜூலை 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது