எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
மேகதாது அணை பற்றி தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் சோமண்ணா பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
கர்நாடகாவைச் சேர்ந்த சோமண்ணாவை நீர்வளத்துறை இணையமைச்சராக நியமித்திருப்பது தமிழ்நாட்டுக்கு செய்த மாபெரும் துரோகம் ஆகும்.
நடுநிலையோடு சோமண்ணா நடக்க வேண்டும்; சோமண்ணா பேசியது டெல்டா விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என எடப்பாடி பழனிசாமி அறிக்கை