சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு மாநகர் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள டோக்கன் வழங்கப்படுகிறது.
மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள வருகிற 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது.
42 பணிமனைகள், பேருந்து நிலையங்களில் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு.
இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை, வயதுச் சான்றாக ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்றுகளில் ஏதேனும் ஒன்று, 2 வண்ணப் புகைப்படங்களை அளித்து பெற்றுக் கொள்ளலாம்.
