முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு
நில மோசடி வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமின் மனு இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.