₹8,358.15 கோடி நிதி திரட்ட எஸ்பிஐ வங்கிக்கு ஒப்புதல்
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க், நடப்பு நிதியாண்டில் பல்வேறு வழிகளில் சுமார் ₹8,358.15 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதற்கு வங்கியின் நிர்வாக வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதை சமாளிக்கும் வகையில், கடன் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வங்கிகள் நிதி திரட்டி வருகின்றன