ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி
ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி ரயில்களின் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்தாண்டு ஆயுத பூஜை வரும் அக்டோபர் 11ம் தேதியும் (வெள்ளிக்கிழமை), விஜயதசமி அக்டோபர் 12ம் தேதியும் (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. 13ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை உள்ளது. இந்த தொடர் விடுமுறை முன்னிட்டு பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர்.
இந்நிலையில் ரயிலில் பயணம் மேற்கொள்வோர் முன்கூட்டியே முன்பதிவு செய்ய தொடங்கி விடுவார்கள். ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. அதன்படி, அக்டோபர் 9ம் தேதிக்கு புறப்படுவோர் இன்று (11ம் தேதி) முன்பதிவு செய்து கொள்ளலாம். அக்டோபர் 10ம் தேதி செல்வோர், நாளையும், அக்டோபர் 11ம் தேதிக்கு 13ம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பெரும்பாலானோர் அக்டோபர் 10ம் தேதி முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.