காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் அளித்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சனம்.
வாரிசு அரசியல் குறித்து பிரதமர் மோடி எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
கட்சிக்காக பாடுபட்டவர்கள், தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு பதவி வழங்குவதையே வாரிசு அரசியல் என விமர்சித்தார் மோடி.
ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையிலேயே வாரிசுகள் நிரம்பியுள்ளன.
போராட்டம், சேவை, தியாகம்தான் எங்களது மரபு என்று சொல்வோர், வாரிசுகளுக்கு பதவி கொடுத்துள்ளனர்.
அவரின் பேச்சுக்கும் செயல்பாடுகளுக்கும் உள்ள வித்தியாசத்திற்கு மோடி என்ன பதில் சொல்லப்போகிறார்?-காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி