சூரியனார் கோவில் முழு விவரங்கள்
சிவசூர்யஸ்வாமி கோவில் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் திருமங்கலக்குடி என்னும் கிராமத்தில் 1800 வருடங்கள் பழமைவாய்ந்த கோவிலாக அமைந்துள்ளது. சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எனும் சிறப்பை சூரியனார் கோயில் பெற்றுள்ளது. ஜோதிட முக்கியத்துவம் வாய்ந்த இத்தலத்தில் மற்ற எட்டு கிரகங்களுக்கான கடவுள்களும் தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர். சூரியனார் கோவில் வந்து வணங்குபவர்களுக்கு சூரியபகவான் அருளால் செல்வம் கொழிக்கும், உடல் வளம் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை.
சிவசூர்யஸ்வாமி கோவில் கி.பி 1100-ல், குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. இதன் கோபுரம் மொத்தம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டுள்ளது. சூரிய தீர்த்தம் என்னும் புனித நீர் நிலை இங்கு அமைந்துள்ளது. சூரியனார் கோவிலின் தனி சிறப்பாக குரு பகவான் சூரிய பகவானை தரிசிப்பதாக விளக்கப்பட்டுள்ளது.
முதலில் சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ள திருமங்கலக்குடி சென்று அங்கு பிராணநாதரையும், மங்கள நாயகியையும் வழிபட்ட பிறகே சூரிய நாராயணனையும் மற்ற நவக்கிரகங்களையும் வழிபட வேண்டும்.