குட்டியானையை சேர்க்க முயற்சி
கோவையில் யானை மந்தைகளுடன் குட்டியானையை சேர்க்க முயற்சி
மருதமலை வனப் பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானையை, யானை மந்தைகளுடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். தாய் யானையை தேடி குட்டி யானையுடன் வனத்துக்குள் வனத்துறையினர் பயணம் மேற்கொண்டனர். குட்டி யானை, தாய் யானையுடனோ அல்லது யானை மந்தைகளுடனோ சேரவில்லை என்றால் முகாமில் விட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குட்டி யானையை நேற்று தாயுடன் சேர்க்கும் முயற்சிகள் பயன் தரவில்லை.