மோடிக்காக பதவியேற்பை தள்ளிவைத்த சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா ஜூன் 12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்காக தனது பதவியேற்பு விழாவை சந்திரபாபு நாயுடு ஜூன் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார். சந்திரபாபு நாயுடு ஜூன் 8ல் பதவியேற்கவிருந்த நிலையில் பிரதமர் மோடிக்காக அந்த தேதியை மாற்றியுள்ளார். ஜூன் 8ம் தேதி பிரதமர் மோடி பதவியேற்கும் விழாவில் சந்திரபாபு நாயுடு பங்கேற்கவுள்ளதால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சித் கலைவர் சந்திரபாபு நாயுடு ஜூன் 12ல் பதவியேற்கிறார்.