நீட் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் 4 பேர்
நீட் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் 4 பேர் 720க்கு 720 எடுத்து இந்திய அளவில் சாதனை
நாமக்கல் தனியார் நீட் பயிற்சி மையத்தைச் சேர்ந்த மாணவர்கள் 4 பேர் 720க்கு 720 எடுத்து இந்திய அளவில் சாதனை படைத்துள்ளனர். மாணவி ஜெயந்தி பூர்வஜா, மாணவர்கள் சபரீசன், ரோஹித், ரஜனீஷ் 720க்கு 720 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 4% மாணவர்கள் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வில் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் பங்கேற்றனர். 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு முடிவை அறிவித்துள்ளது. இளங்கலைப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை neet.ntaonline.in என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.
NEET UG நுழைவுத் தேர்வு மே 5, 2024 அன்று நடத்தப்பட்டது. தற்காலிக விடைக்குறிப்பு மே 29 அன்று வெளியிடப்பட்டது . நீட் தேர்வில் இந்தியர்கள் 23 லட்சத்து 30 ஆயிரத்து 225 பேர் பங்கேற்றதில் 13 லட்சத்து 14 ஆயிரத்து 160 பேர் தகுதி பெற்றுள்ளனர். வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 1122 பேர் எழுதியதில் 694 பேரும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் 1214 பேர் எழுதியதில் 798 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 1 லட்சத்து 58 ஆயிரத்து 449 பேர் பதிவு செய்ததில், 1 லட்சத்து 52 ஆயிரத்து 920 பேர் தேர்வில் பங்கேற்று 89 ஆயிரத்து 426 பேர் தகுதி பெற்றுள்ளனர்.