5வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் மீண்டும் முன்னிலை
வாரணாசியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த பிரதமர் மோடி, 5வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் மீண்டும் முன்னிலை
வாரணாசியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த பிரதமர் மோடி, 5வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் மீண்டும் முன்னிலை வகித்தார். நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்துடன், ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும், சில மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தின் முன்னிலை விவரங்கள் வெளியாகி வருகின்றன.
அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 34 தொகுதிகளிலும், காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணி 40 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனிடையே உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் 3வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி 4வது சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் தொடர் பின்னடைவை சந்தித்து இருந்தார். எனினும் 5வது சுற்று வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட பிரதமர் மோடி தற்போது 436 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அதன்படி பிரதமர் மோடி 28,719 வாக்குகளை பெற்றுள்ளார். ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர ராகுல் காந்தி 28 ஆயிரத்து 799 வாக்குகள் இதுவரை பெற்று மற்ற வேட்பாளர்களை விட 13 ஆயிரத்து 454 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.