மொபைல் ரீசார்ஜ் கட்டண விகிதங்களில் மாற்றங்கள்
விரைவில் தொலைத்தொடர்பு சேவை கட்டணம் 15 முதல் 17 சதவிகிதம் வரை உயர்த்தக் கூடும்.
மொபைல் ரீசார்ஜ் கட்டண விகிதங்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையிலான சேவையை தற்போது கொடுத்து வருகின்றன.
இப்போதே பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிறைய சேவை குறை பாட்டுடன் செயல்படுகின்றன. இன்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் டவர் ரேஞ்சே இருக்காது.
நாம் 28 நாட்கள், 90 நாட்கள் அல்லது 365 நாட்கள் என முன்கூட்டியே ரீசார்ஜ் செய்துள்ளோம்.
ஆனால் பல இடங்களில் நமக்கு சேவை குறைபாடு உள்ளது இதனை சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சேவை மையத்திடம் கேட்க போனால் அவர்களின் பதில் ஓரிரு நாட்களில் சரி செய்து விடுவோம் சார் என உறுதி கூறுவர். ஆனால் பல மாதங்களாகியும் அதே நிலை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில் கட்டணத்தை உயர்த்தப் போகிறீர்கள் என்றால் இனிமேலும் உங்களது தொலைத்தொடர்பு சேவையில் எந்த விதமான குறைபாடு இருக்காது என உங்களால் உறுதியளிக்க இயலுமா?
அவ்வாறு இயலுமானால் கட்டணத்தை உயர்த்துங்கள் இல்லையேல் அரைத்த மாவையே அரையுங்கள்.
இப்படிக்கு
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களில் ஒருவன்.