ஜூன் 4 முதல் பக்தர்கள் அனுமதி.

சதுரகிரியில் பிரதோஷம், அமாவாசை வழிபாடு:

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு ஜூன் 4 முதல் 7 வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இக்கோயிலில் ஜூன் 4ல் பிரதோஷம், ஜூன் 6ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது.

இதனை முன்னிட்டு ஜூன் 4 முதல் 7 வரை நான்கு நாட்கள் தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

இருந்த போதிலும் அன்றைய நாட்களில் மழை பெய்வதை பொறுத்து தான் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.