272 இடங்களுக்கு மேல் வென்று இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: காங்கிரஸ் உறுதி

 இந்தியா கூட்டணி 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், பிரதமர் யார் என்பதை 48 மணி நேரத்துக்குள் அறிவிப்போம் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 18வது மக்களவைக்கான 7 கட்ட தேர்தலில் 6 கட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், 7 மற்றும் கடைசிக் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

 காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியா கூட்டணி அறுதி பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு அமோக வெற்றி கிடைக்கும். மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், அசாம் மாநிலங்களில் காங்கிரஸ் மேலும் வலுப்பெறும்.

Leave a Reply

Your email address will not be published.