மோடியின் வெறுப்பு பேச்சுக்களால் பிரதமர் பதவிக்கே இழுக்கு:
மோடியின் வெறுப்பு பேச்சுக்களால் பிரதமர் பதவிக்கே இழுக்கு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தற்போது வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். கடந்த மாதம் ராஜஸ்தான், பன்ஸ்வாராவில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி, 2006ம் ஆண்டின் போது, நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை இருக்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாக குற்றம் சாட்டியிருந்தார்.
பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மக்களவைக்கு 6 கட்ட தேர்தல் முடிந்து நாளை கடைசி கட்ட தேர்தல் நடக்க உள்ள நிலையில் மோடியின் ராஜஸ்தான் பேச்சுக்கு மன்மோகன் சிங் பதிலடி கொடுத்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்த மாநில மக்களுக்கு மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்பு, அமைதி, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்.