தலைமை நீதிபதியிடம் முறையிட அறிவுறுத்தல்
ஜாமினை நீட்டிக்கக் கோரிய கெஜ்ரிவால் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு:
டெல்லி: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் ஜாமீனை நீட்டிக்க கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிட கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பணமோசடி வழக்கில் வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து உச்சநீதிமன்றம் அவருக்கு 21 நாள் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கியது.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சில மருத்துவப் பரிசோதனைகள் தேவை என்றும், இதற்காக ஜூன் 1ம் தேதியுடன் முடிவடையும் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உடல் நலக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் மனுவை 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிய டெல்லி முதல்வரின் மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முக்கிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு கோரி முதல்வர் கெஜ்ரிவாலின் மனுவை பட்டியலிடுவது குறித்து தலைமை நீதிபதி தகுந்த முடிவை எடுப்பார் என்று உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு தெரிவித்துள்ளது.
மே 10-ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், நடந்து வரும் மக்களவை தேர்தலுக்கான ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணிக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஜாமீன் ஜூன் 1-ம் தேதி வரை உள்ளநிலையில், டெல்லி முதல்வர் ஜூன் 2-ம் தேதி அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும். அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, ஆனால் முதல்வராக அவர் அலுவலகத்திற்குச் செல்ல அனுமதி இல்லை