(வேலூர்) 9ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி வேலூர் அருகே சோகம்
பள்ளிகொண்டா, மே 27: வேலூர் அருகே கிணற்றில் குளிக்க முயன்றபோது நீரில் மூழ்கிய 9ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலியானார். வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த அப்துல்லாபுரம் திலகர் தெருவை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். இவரது மகன் ஜெகதீஷ்(14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு முடித்து விட்டு 10ம் வகுப்பு செல்ல இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஜெகதீஷ் தனது நண்பர்களுடன் விளையாடுவதற்காக வெளியே சென்றார். பின்னர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை