டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு
“தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும்”
உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு
உடல்நிலையை காரணம் காட்டி, மேலும் 7 நாட்கள் இடைக்கால ஜாமினை நீட்டிக்க கோரிக்கை
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்
தேர்தல் காரணமாக ஜூன் 1ஆம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கடந்த 10ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது
வரும் 1ஆம் தேதியுடன் இடைக்கால ஜாமின் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 7 நாட்கள் நீட்டிக்க கோரி மனு