சிறப்பு ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு: தமிழ்நாடு அரசு உத்தரவு
சிறப்பு ஆசிரியர், தசைப் பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000லிருந்து ரூ.18,000ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்கும் வகையில் ரூ.21.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.