6 பேர் கைது
சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பு:
சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராயப்பேட்டையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரகசிய கூட்டங்கள் நடத்தி வந்ததை தீவிரவாத தடுப்பு பிரிவு கண்டறிந்தது. டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் பயங்கரவாத அமைப்பில் உறுப்பினர்களாக இருந்ததும் அம்பலமாகியுள்ளது. டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்” என்ற பெயரில் யூடியூபில் பல்வேறு வீடியோக்களை உசேன் வெளியிட்டு வந்துள்ளார்.ஹமீது உசேன் யூடியூப்-ல் இந்திய தேர்தல் முறைக்கு எதிரான பேச்சு, கிலாபாத் சித்தாந்தம் குறித்து வெளியிட்டுள்ளார்.