தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கும் ராகுல் காந்தி!

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகின்றார்.

இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வருகின்றார். இதுகுறித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில், 23, 24 ,25 தேதிகளில் கோவையில் ஆரம்பித்து கரூர் வரை ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் பரப்புரை செய்கிறார். இந்த தேர்தல் பரப்புரையின் முக்கிய நோக்கம், தமிழ் மக்களுக்கு பாரதிய ஜனதா அரசாங்கமும் – அதிமுக அரசாங்கமும் செய்திருக்கின்ற தீய செயல்களை எடுத்துச் சொல்லி, நாட்டினுடைய வளர்ச்சி எவ்வாறு குறைந்திருக்கிறது.விவசாயிகளுடைய வாழ்வாதாரம் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது ? மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற மூன்று வேளாண் சட்டங்கள் இந்திய விவசாயிகளை எப்படி பாதிக்கிறது ? தமிழகத்தில் நீட் தேர்வினால் மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் ? தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தமிழக அரசு கேட்டுக் கொண்ட எந்த நிதியும் வழங்காதது இவைகளை பற்றி எல்லாம் ராகுல் காந்தி பொதுமக்களிடையே பரப்புரை செய்வார்கள்.

எங்களுடைய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை எழுச்சியோடும், வேகத்தோடும் தலைவர் ராகுல் காந்தி ஆரம்பிக்க இருக்கிறார்கள். கொங்கு மண்டலம் எங்களுக்கான மண்டலம் என்பதனை இந்த தேர்தல் பரப்புரை தெளிவுபடுத்தும். ராகுல் காந்தி ஐந்து கட்டமாக தமிழகத்துக்கு வர இருக்கின்றார். முதற்கட்டம் கொங்கு மண்டலத்தில், அதன்பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு பகுதிக்கு அவர் வருகிறார்கள்.

ஏதாவது ஒரு கூட்டத்தில் திமுக தலைவர் முக. ஸ்டாலின் மற்றும் எங்களுடைய கூட்டணியில் இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லோரும் கலந்து கொள்கின்ற ஒரு நிகழ்வு நடைபெறும். கோவையில் இருந்து கரூர் வரை பரப்புரை நடைபெற இருக்கிறது. சிறு தொழில் செய்பவர்களை சந்திக்கிறார், தொழிலாளர்களை திருப்பூரில் சந்திக்கிறார், விவசாயிகளை கரூரில் சந்திக்கிறார், நெசவாளர்களை தாராபுரத்தில் சந்திக்கிறார். இப்படியாக பல்வேறு பகுதி மக்களை கலந்துரையாடுகிறார்.

ஒரு மேடையில் ஏறி பேசுவதை விட மற்ற இடங்களில் மக்களிடம் நேரடியாக சென்று பேசுகிறார். அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். அவர்களோடு சிறிது நேரம் அமர்ந்து இருக்கிறார். அவர்களோடு உணவு உண்கிறார். மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கூட ஒரு கிராமத்திற்கு சென்று அந்த கிராம மக்களோடு உணவருந்தினார். எனவே அந்த வகையிலேயே மக்களோடு மக்களாக ராகுல் காந்தி இருக்கிறார் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.

S.முஹமது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர்

தமிழ் மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.