கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பேட்டி

சிலந்தியாற்றில் கட்டப்படுவது தடுப்பணை அல்ல:

சிலந்தியாற்றில் கட்டப்படுவது தடுப்பணை அல்ல, அப்பகுதியிலுள்ள ஆதிவாசிகள் குடும்பத்தினருக்கான குடிநீர் திட்டம்தான் செயல்படுத்தப்படுகிறது என்று கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் கூறினார். இடுக்கி மாவட்டத்திலுள்ள சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இடுக்கி மாவட்டம் வட்டவடா அருகே உள்ள சிலந்தியாற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான தகவலில் எந்த உண்மையையும் கிடையாது.

ஜல்ஜீவன் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வட்டவடா பஞ்சாயத்திலுள்ள சிலந்தியாற்றில் குடிநீர் விநியோகத் திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் வசிக்கும் ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த 7 ஆயிரம் பேருக்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு நீர்வீழ்ச்சி இருப்பதால் ஆற்றிலுள்ள தண்ணீர் சமநிலையாக இல்லை. இதனால் குடிநீர் வினியோகம் செய்ய முடியாது. இதன் காரணமாக தண்ணீரை சமநிலைப்படுத்தும் பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகின்றன தடுப்பணை கட்டவில்லை. இந்தத் திட்டம் செயல்படுத்துவதால் அமராவதி நதிக்கு செல்லும் தண்ணீர் குறையாது. தமிழக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் நேற்று இந்தப் பகுதிக்கு வந்து பார்த்து விட்டு சென்றனர் ” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.