கோயில் திருவிழாக்களில் பாகுபாடு காட்டக் கூடாது:
ஐகோர்ட் கிளை கருத்து
கோயில் திருவிழாக்களில் கிராம மக்களிடையே எந்த பாகுபாடும் காட்டக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. விருதுநகர் அருகே கோயில் பூச்சொரிதல் விழாவில் பட்டியலின மக்களிடம் பாகுபாடு காட்டுவதாக புகார் அளிக்கப்பட்டது. பள்ளப்பட்டியில் உள்ள அழகிய மீனாள் கோயில் பூச்சொரிதல் விழாவில் பட்டியலின மக்களிடம் பாகுபாடு காட்டுவதாக வழக்கு தொடரப்பட்டது. விருதுநகர் ஆட்சியர், வருவாய்த்துறையினர், கிராம மக்கள் இணைந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி திருவிழாவை சுமுகமாக நடத்த வேண்டும் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி மஞ்சுளா வலியுறுத்தியுள்ளார்.