முன்னெச்சரிக்கை: தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தலைமையில் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது. தேசிய மருத்துவ திட்டபணிகள் இயக்குநர், பொது சுகாதார இயக்குனர், மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவ நலப் பணிகள் இயக்குனர் பங்கேற்றுள்ளனர். எதிர்வரும் மழைக் காலத்தில் மருத்துவத் திட்டங்களை செயல்படுத்துவது, மழைக்காலங்களில் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்வது, பேரிடர் நேரங்களை சமாளிப்பது உள்ளிட்டவைக் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளது.