மும்பையில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் டோம்பிவிலி பகுதியில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாய்லர் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பெருமளவிலான கரும்புகை உருவாகி அதிலிருந்து சாம்பல்கள் மழைச்சாரல் போல கீழே விழுந்ததாகவும் 3 முறை வெடி சத்தம் கேட்டதாகவும் சுமார் 3-4 கிமீ வரை அதிர்வு உணரப்பட்டதாகவும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கூறியுள்ளனர். இந்த வெடி விபத்தால் அருகில் இருந்த கார் ஷோ ரூம் மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 35-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.