முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
பங்களாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். டான்ஜெட்கோ மற்றும் ராஜேஷ் தாஸின் முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தையூர் பங்களா வீட்டுக்கு வந்த ராஜேஷ் தாஸ், காவலாளியை தாக்கி வெளியேற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. பீலா அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தனது பெயரில் உள்ள பங்களாவின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பீலா வெங்கடேசன், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மின் இணைப்பை துண்டித்ததாக ராஜேஷ் தாஸ் புகார் அளித்துள்ளார்