தமிழ்நாடு அரசு

மனநல காப்பக வளாகத்தில் 6 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: தமிழ்நாடு அரசு

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் 6 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்கும் வகையில் புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. மனநலம் மற்றும் நரம்பியல் நிலையத்துக்கு ரூ.35 கோடி செலவில் தரைதளத்துடன் 6 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்படுகிறது. 88,039 சதுர அடி பரப்பளவில் 239 படுக்கை வசதிகளுடன் கட்டடம் உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.