சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 5 மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி அருகே நீதிமன்ற அறைகள், நீதிபதிகள் அறைகள் உள்ளிட்டவை அடங்கிய 5 மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையில் நடைபெற்றது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், டி.கிருஷ்ணகுமார், ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.