கோடைகால இலவச குத்துசண்டை பயிற்சி முகாம்
திருச்சியில் கடந்த 15 நாட்களாக 7வயது முதல் 30 வரையிலானவர்களுக்கு ஆர்டிலெரி பாக்ஸிங் அகாடமி சார்பில் கோடைகால இலவச குத்துசண்டை பயிற்சி முகாம் நடைபெற்றது. கடந்த 8ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி முகாமை திருச்சி பாக்ஸிங் சங்கத்தின் செயலாளர் நடராஜன் தொடங்கி வைத்தார். இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். முகாமில் முதலில் உடலை உறுதிபடுத்தவும், குத்துசண்டை பயிற்சியும், தாக்குதல் மற்றும் தற்காப்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் இறுதிநாளான நேற்று பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு பத்திரங்கள் மற்றும் பங்கேற்றவர்களில் சிறப்பாக பயிற்சி எடுத்துகொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. இந்த இறுதி விழாவில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பயிற்சியாளர் எழில் மணி, பாக்ஸிங் அகாடமி அமைப்பு செயலாளர் மிதுன் சக்கரவரத்தி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.