இளைஞர்களுக்கு நூதன தண்டனை
புதுச்சேரி கடலில் தடையை மீறி குளித்த இளைஞர்களுக்கு நூதன தண்டனை
புதுச்சேரியில் தடையை மீறி குளித்த இளைஞர்களுக்கு போலீசாரால் நூதன தண்டனை விதிக்கப்பட்டது. சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு தினமும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை அதிகம் வருவது கடற்கரை பகுதிக்குதான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடலில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர். ஆனால், சமீபகாலமாக வெளிமாநிலத்தவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனால் கடலில் இறங்கி குளிக்க காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். இதையும் மீறி பலர் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர்.