விழுப்புரம் இணை சார்-பதிவாளர் வீட்டில் சோதனை
விழுப்புரம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் இணை சார்-பதிவாளர் தையல்நாயகியிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்த நிலையில் நெய்வேலியில் உள்ள இணை சார்- பதிவாளர் தையல்நாயகி வீட்டில் இன்று சோதனை நடைபெற்று வருகிறது. இணை சார்-பதிவாளர் தையல் நாயகி வீட்டில் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்