கோவை மாநகராட்சி எல்லையை விரிவுப்படுத்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கை
கோவை மாநகராட்சி வளர்ச்சியை கருத்தில் கொண்டு எல்லையை விரிவுப்படுத்தி வார்டு மறுவரையறை செய்ய வேண்டும் என்று ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். கோவை மாநகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். கோவையில் உள்ள சில வார்டுகளில் வாக்காளர் எண்ணிக்கையில் பெரும் வேறுபாடு உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு தேர்தல் அறிவிப்புக்கு முன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.