பப்புவா நியூ கினியாவில் பலத்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் இன்று பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவு

பப்புவா நியூ கினியாவில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகின் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் போன்ற இயற்கை பேரிடர்கள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பப்புவா நியூ கினியாவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக் கடலில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா அருகில் உள்ளது பப்புவா நியூ கினியா தீவு. இந்த பகுதியை சுற்றி ஏராளமான தீவுகள் உள்ளன. பப்புவா நியூ கினியாவில், மொரோபியில் உள்ள லேயிலிருந்து வடகிழக்கே 58 கிலோமீட்டர் (36 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.