வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி
ஷூ தயாரிக்கும் நிறுவனங்களில் ரூ.40 கோடி பறிமுதல்- வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
புதுடெல்லி: ஆக்ராவில் உள்ள ஷூ தயாரிக்கும் நிறுவனங்கள், உற்பத்தியாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.40 கோடி ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணி நடைபெற்று வருவதால் இதன் மதிப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஷூ தயாரிக்கும் நிறுவனங்களுடன் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
இதனிடையே, உத்தரபிரதேசத்தில் குறைந்தபட்சம் 3 ஷூ வியாபாரிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், பெரும் தொகை மீட்கப்பட்டுள்ளது.