சிபிசிஐடி வழக்குப்பதிவு
குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த புகார்;
சங்கன்விடுதி அருகே குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த புகாரில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம் சங்கம் விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கடந்த 25ம் தேதி மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதன் காரணமாக சிலருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது இதைத் தொடர்ந்து மண்டல பொது சுகாதார நீர்பகுப்பாய்வு ஆவதற்கு ஆய்வகத்திற்கு தொட்டியில் உள்ள நீர் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் நோய் கிருமி எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சங்கன்விடுதி அருகே குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த புகாரில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.
குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை என முடிவுகளில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சண்முகம் என்பவர் தொடர்ந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியிருந்தது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர்.