டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உறுதி
பாஜக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.. பாஜக 200 இடங்களைக் கூட பெற முடியாது:
வரும் ஜூன் 4ம் தேதி பாஜக நிச்சயமாக ஆட்சி அமைக்கது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் உறுதிப்பட தெரிவித்துள்ளார். தெற்கு டெல்லி மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சாஹி ராமுக்கு ஆதரவாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேரணியில் கலந்து கொண்டார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்;
வரும் ஜூன் 4ம் தெத்து வெளியாகும் தேர்தல் முடிவுகளின் படி பாஜக 200 இடங்களை கூட பெறாது எனவும், நிச்சயமாக ஆட்சி அமைக்க முடியாது என்றும் அக்கட்சி தலைவர்களுக்கு நன்கு தெரியும் என்று தெரிவித்தார். பாஜக-வினர் ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து தலைவர்களையும் சிறையில் அடைக்க விரும்புவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இலவச பேருந்து பயண திட்டத்தை நிறுத்த பிரதமர் மோடி முயற்சிப்பதாகவும், ஆனால் ஒருபோதும் அந்த திட்டத்தை திரும்ப பெற மாட்டேன் எனவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்தார்.