கேரளாவில் டெங்கு பரவுகிறது: 4 மாதங்களில் 43 பேர் பலி
கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த 4 மாதங்களில் இந்த காய்ச்சலுக்கு 43 பேர் மரணமடைந்துள்ளனர். கேரளாவில் கடந்த சில மாதங்களாக டெங்கு, மலேரியா மற்றும் மஞ்சள் காமாலை உள்பட நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்த நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். ஆனாலும் நோயின் தீவிரம் இதுவரை குறையவில்லை. கோழிக்கோடு உள்பட ஒரு சில பகுதிகளில் வெஸ்ட் நைல் காய்ச்சலும் பரவி வருகிறது.