விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை
பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு: உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
பூந்தமல்லி அருகே வீட்டில் அடைக்கப்பட்டிருந்த 18 நாய்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கிருத்திகா என்பவருக்கு சொந்தமான வீட்டை, பிரியா என்பவர் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். வெளியூர் செல்லும் பொதுமக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் நாய்களை இவரது பராமரிப்பில் விட்டுச் செல்வது வழக்கம். இதற்கென பிரியா ஒரு தொகையை பெற்றுக்கொண்டு நாய்களை பராமரித்து வந்துள்ளார்.