தமிழ்நாடு ஜாதிமறுப்பு இணையர்கள் நலச்சங்கம்.
புதுச்சேரியில் திருமணத்தை பதிவு செய்ய கட்டாயம் பெற்றோர்கள் வர வேண்டும் இல்லையென்றால் பதிவு செய்ய முடியாது என்று அங்குள்ள சார்பதிவாளர்கள் கூறிவந்த நிலையில்.. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தலைமை பதிவாளரிடம் RTI வாயிலாக தகவல் கேட்டிருந்தோம்..
அந்த அடிப்படையில் அவரும் நமக்கு தகவல் வழங்கியிருக்கிறார்கள்..
அவர்கள் வழங்கிய தகவலின்படி மணமகள் அல்லது மணமக்கள் இருவரின் பெற்றோர் சாட்சி கையெழுத்து போட வேண்டுமென்றோ அல்லது நேரில் வர வேண்டுமென்றோ அவசியமில்லை என்பது தெளிவாகிறது..
இருப்பினும் அங்குள்ள சார்பதிவாளர்கள் சட்டத்தில் குறிப்பிடாத விசயங்களை முன் நிறுத்தி ஜாதி, மத மறுப்பு திருமணங்களை பதிவு செய்ய மறுப்பது சட்ட விரோதமானது, மிகவும் கண்டிக்கதக்கது..
நிற்க:- RTI விபரம் இனைக்கப்பட்டிருக்கிறது..
வழ.இரமேசு பெரியார்.
செயலாளர்,
தமிழ்நாடு ஜாதிமறுப்பு இணையர்கள் நலச்சங்கம்.