போர்க்களமாக மாறிய தைவான் நாடாளுமன்றம்
போர்க்களமாக மாறிய தைவான் நாடாளுமன்றம்.. அடிதடியில் ஈடுபட்ட உறுப்பினர்கள்; சட்ட மசோதாவை தூக்கிக் கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு
தைவானில் புதிய விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, உறுப்பினர்கள் மத்தியில் கைகலப்பு ஏற்பட்டது. தைவானில் புதிய அதிபராக லாய் சிங் தே விரைவில் பதவியேற்க உள்ளார். அவரது ஜனநாயக முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை பெறவில்லை என்றாலும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளது. அந்த கட்சியை விட அதிக இடங்கள் பெற்ற கேஎம்டி கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வர வலியுறுத்தினர். அதன்படி அவையில் பொய்யான கருத்துக்களை கூறுபவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக அவையில் நடந்த விவாதம் வாக்குவாதமாக மாறியது. உறுப்பினர்கள் இடையே கைகலப்பு ஏற்பட, ஒருவர் சபாநாயகர் முன்பு இருந்த சட்ட மசோதாவை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார். அனைத்து உறுப்பினர்களும் மேசை மீது ஏறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இரவு வரை இந்த தகராறு நீடித்தது. இதனால் நாடாளுமன்றம் பரபரப்பாக காணப்பட்டது. தைவான் நானடாளுமன்றத்தில் கைகலப்பு நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து பன்றிகளை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு KMT கட்சியினர் ஆளுங்கட்சியினர் மீது பன்றியின் குடலை எரிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.