கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் மாணவர்களுக்கு வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. கிர்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் இந்திய மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.