ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே கார் மீது
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே கார் மீது லாரி மோதி 5 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குத்தி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். திருமணத்துக்காக ஐதராபாத் சென்று புத்தாடை வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் வழியில் கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் அல்லி சாஹேப் (58), ரெஹானா பேகம் (50), ஷேக் சுரோஜ்பாஷா (28), முகமது அயன் (6), அமன் (4) ஆகியோர் பலியாகினர்.