கட்டணமில்லா பேருந்து சேவை

கட்டணமில்லா பேருந்து சேவை: மகளிர் 11.84 கோடி முறை பயணம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடியல் பய ணத் திட்டத்தில் பெண்கள் 11.84 கோடி முறை கட்டணமில்லா பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், வியா முக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பெண்களின் பொருளாதார மேம் பாட்டிற்காகவும், அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, முதல்வரின் விடியல் பயணத் திட்டம் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத் திற னாளிகள் 11.84 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.
இந்தக் கட்டணமில்லா பயணம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ. 888 வரை சேமிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

Leave a Reply

Your email address will not be published.