தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 5.54 லட்சம் மோசடி
கிருஷ்ணகிரி,மே 16: முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாகக் கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 5.55 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், மூக்கண்டப்பள்ளி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் அரவிந்தன் (28). இவர், பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த பிப்.15 ஆம் தேதி இவ ரது கைப்பேசிக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் இணையவழி பகுதிநேர வேலை உள்ள தாகவும், முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை நம்பி அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை அரவிந்தன் தொடர்பு கொண்ட விசாரித்தபோது எதிர்முனையில் இருந்தவர் கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து, அந்த நபர்கள் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு ரூ. 5.54 லட்சத்தை அரவிந்தன் செலுத்தியுள்ளார். ஆனால், அந்த நபர் கள் கூறியபடி எந்த லாபமும் அரவிந்தனுக்கு வரவில்லை. இதனால் அந்த எண்ணை மீண்டும் அரவிந்தன் தொடர்பு கொண்டபோது அந்த கைப்பேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தத தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அரவிந்தன், இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.